3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் ஃபோர்டு நிறுவனம்

ஃபோர்டு நிறுவனத்தின் புதிய கார்கள் வடிவமைப்பு மையம் சென்னையில் துவங்க இருப்பதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் பில் ஃபோர்டு தெரிவித்துள்ளார்.
ஃபோர்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது, அதில் பங்கேற்ற பில் ஃபோர்டு 2019ம் ஆண்டுக்குள் 1300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கார்கள் வடிவமைப்பு மற்றும் வர்த்தக மையம் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.
அதை தொடர்ந்து தமிழகத்தில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இந்த புதிய மையம் உதவும் என்றும் தமிழகத்தில் ஏற்கனவே உள்ள ஃபோர்டு தொழிற்சாலைகளில் 9,000 நபர்கள் பணியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வர்த்தக மையம் மற்றும் கார்கள் வடிவமைப்பிற்காக 1300 கோடி ரூபாயில் மதிப்பிடபட்டுள்ளதாகவும் இது உலக முதலீட்டாளர் மாநாட்டின் ஒப்பந்த அடிப்படையில் வடிவமைப்பு மற்றும் வர்த்தக மையம் தொடங்குவதாகவும் , தமிழகம் தொழில் தொடங்கவும், தொழில் செய்யவும் சிறந்த இடமாக திகழ்வதாகவும் கூறினார்.

154
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: