2ஜி ஊழல் தவறாக தெரியவில்லையா? எதிர்க்கட்சிகளுக்கு ஜெட்லி கேள்வி

புதுடில்லி: 2ஜி, நிலக்கரி ஊழல் எல்லாம் தவறாக தெரியவில்லையா என எதிர்க்கட்சிகளுக்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார். சரியா பேசவில்லை: ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து பத்திரிகையாளர்களிடம் ஜெட்லி கூறியதாவது: கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கை சரியானது தான் என நிருபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ராஜ்யசபாவில் பங்கேற்ற பின்னரும் விவாதத்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. விவாதத்தில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சியினர் காரணங்களை கண்டுபிடிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் சரியாக எதையும் பேசுவதில்லை. அவர்கள் வெறும் கோஷம் எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சியினரிடம் எந்த திட்டமும் இல்லை.
அவர்கள் முன்னேற்பாடாக வருவதில்லை. அவர்கள் விவாதத்தில் பிரதமர் கலந்து கொள்ள வேண்டுமே என கோஷம் எழுப்பினர்.நீண்ட கால பலன் அதிகாரிகளாக இருப்பவர்கள் கொள்கை அடிப்படையில் தான் செயல்படுகின்றனர். அவர்களின் திறமை, எத்தனை முறை டிவியில் தோன்றினார் என வைத்து முடிவு செய்யப்படுவதில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலம் பலனளிக்கக்கூடியது.

மன்மோகன் கூறுவதை போல் ஜிடிபி குறையும் என்பதை ஏற்க முடியாது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தில் ஊழல் எனக்கூறும் எதிர்க்கட்சிகளுக்கு 2ஜி ஊழல் தவறாக தெரியவில்லையா? காங்கிரஸ் ஆட்சியில் தான் 2ஜி, நிலக்கரி மற்றும் காமன்வெல்த் ஊழல் நடந்தது. கடந்த காலத்தில் நடந்த ஊழல்களால் தான் கறுப்பு பணம் அதிகரித்துள்ளது என்றார்.

169
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: