1 கோடி ஹிட்ஸ்… அதுவும் ஹாட்ரிக்… ஓட்டமாய் ஓடும் பந்தயக்குதிரை இளையதளபதி

சென்னை: செம ரேஸில் முந்திக் கொண்ட பந்தயக் குதிரையாகி விட்டார் விஜய் என்று தகவல் சொல்லியிருக்கிறார் கோலிவிட் உளவாளி உலகநாதன். என்னன்னு தெரியுங்களா?

அட சொல்லுங்கப்பா என்கிறீர்களா? இதோ சொல்லிடுவோம். வசூலில் சூப்பர் ஸ்டாருக்கு பின்னாடியே செம வேகமாக முன்னேறிக்கிட்டு இருக்கார் விஜய். இந்த பந்தயக்குதிரையை நம்பி ஏராளமான தயாரிப்பாளர்கள் பணம் கட்ட (படம் எடுக்க) இப்பவும் ரெடியோ… ரெடி.

இந்நிலையில் யு-டியூப்பை பொறுத்த வரை கபாலி டீசர், பாடல்கள் செய்த ராஜ்ஜியம் அனைவருக்கு தெரிந்த ஒன்று. ஆனால் சூப்பர் ஸ்டாரே செய்ய முடியாத ஒரு சாதனையை விஜய் செய்துவிட்டார். ஆமாங்க தெறி டீசர், ட்ரைலர், பைரவா டீசர் என்று மூன்றுமே 1 கோடி ஹிட்ஸை தொட்டுவிட்டது.

ஒரு லட்சம் லைக்சுகளை தாண்டிவிட்டது, தென்னிந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை இதன் மூலம் விஜய் செய்து விட்டார். இதனால் இப்போது சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாடாத குறைதான்.

60
-
80%
Rates : 5

Leave a Reply

%d bloggers like this: