ஹலோ..சம்பளம் வாங்காமல் நீங்கள் ஃபேஸ்புக்கிற்காக வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா?

வருஷம் முழுக்க சம்பளம் கிடையாது ஆனா இந்த ஆபீஸுக்காக நீ வேலை பாக்கணும்னு சொன்னா உங்க பதில் என்னவா இருக்கும், ஆனா நீங்க ஒரு கம்பெனிக்கு வருஷம் 365 நாளும் 24 மணி நேரமும் காசு வாங்காம வேலை பாத்துட்டு இருக்கீங்க. ஆமாம் ஃபேஸ்புக்காக தான் நீங்க வேலை பாக்குறீங்க. இதுக்கு உங்களுக்கு காசு தர முடியாதுனு சொல்லி இருக்கு சமீபத்திய ஃபேஸ்புக் அறிவிப்பு.
அட என்னப்பா, என் ப்ரோஃபைல் நா ஸ்டேட்டஸ் போடுறேன். இது எப்படி வேலையாகும்னு நீங்க கேட்கலாம். நீங்க போடுற ஸ்டேட்டஸ் ஆரம்பிச்சு, நீங்க படம் பாக்குறேன், பீச்ல இருக்கேன், அமெரிக்கா போறேன்னு போடுற எல்லாமே பிசினெஸ் தான். சமீபத்துல உங்களுக்கு ஃபேஸ்புக்ல இருந்து ஒரு நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும்.

அதில் நீங்கள் ஃபேஸ்புக் எடிட்டர் பக்கத்துக்கு வரவேற்கப்படுகிறீர்கள் . இதில் நீங்கள் தன்னார்வத்துடன் இணைந்துள்ளீர்கள். இதிலிருந்து நீங்கள் எந்த நேரத்திலும் வெளியேறலாம். நீங்கள் ஃபேஸ்புக் எடிட்டராக தேர்ந்தெடுக்கப்படுவதால் நீங்கள் ஃபேஸ்புக்கின் ஊழியராகவோ, ஏஜென்ட்டாகவோ, கான்ட்ரிப்யூட்டரோ கிடையாது. இதற்காக உங்களுக்கு எந்த வெகுமதியும் அளிப்படமாட்டாது.
உங்களது ஃப்ரோஃபைலில் தெரியும் லீடர் போர்டில் நீங்கள் அதிக புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுவீர்கள். இது நீங்கள் இருக்கும் இடத்தை வைத்தும் தரவரிசைப்படுத்தப்படும். தரவரிசைக்கான புள்ளிகள் நீங்கள் அளிக்கும் விவரத்தின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் வழங்கப்படும் என்கின்றனர்.

ஏன் இதனை செய்கிறது ஃபேஸ்புக்?
கிட்டத்தட்ட எல்லா தளங்களுக்கும் மாற்றாக அடியெடுத்து வைக்கும் ஃபேஸ்புக், பின் தங்கும் தளங்கள் என்பவை மேப்ஸ், சர்ச் இன்ஜின் போன்றவற்றில் தான். அதில் கூகுள் நிறுவனம் அசைக்கமுடியாத நிறுவனமாக உள்ளது.
அதிலும் கால் பதிக்கும் நோக்கத்தில் தான் ஃபேஸ்புக் இந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. உதாரணத்துக்கு நீங்கள் தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளதை பதிவிட்டிருந்தால் உங்கள் நண்பர் ஒருவர் அங்கு செல்லும்போது நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்கள் என்ற தகவல் அவருக்கு தெரியும், மேலும் ஒரு உணவகத்துக்கு நீங்கள் சென்று ரேட்டிங் அளித்துள்ளீர்கள் என்றால் உங்கள் நண்பர் அந்த உணவகத்துக்கு செல்லும்போது உங்கள் நண்பரால் மதிப்பிடப்பட்ட உணவகம் என்ற செய்தியும் அவருக்கு செல்லும்.

உலகில் டேட்டாக்களை கையாளும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஃபேஸ்புக்கும் ஒன்று, ஒருவரது தகவல்களை அவருக்கு அளிக்கும் போது அதனை ஏற்பவர் 100% நம்பிக்கையாக இருக்க வேண்டும் என நினைப்பதை விரும்புவார். அதேசமயம் பரிந்துரை செய்வது உங்கள் நண்பர் என்றால் நீங்கள் நம்புவீர்கள் என்பதை நன்கு அறிந்த ஃபேஸ்புக்கின் அதிரடி உத்திதான் இது.
இதன்படி பார்த்தால் நீங்கள் தகவல்களை ஃபேஸ்புக்கிற்கு அளிக்கிறீர்கள், அதனால் பல லட்சம் பேர் பயன்பெறுகிறார்கள், நீங்கள் ஸ்டேட்டஸ் போடுகிறீர்கள் அது பல லட்சம் பேருக்கு உதவும் டேட்டாவாக உள்ளது. இந்த வேலைகளை 24*365 செய்யும் நாம் இதற்காக எந்த சம்பளமும் வாங்காத பணியாளராக தன்னார்வத்துடன் இதனை செய்கிறோம்.
மார்க் உலகை இணைக்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையில் இதுவரை 2 பில்லியன் சம்பளம் வாங்காத பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார் மார்க் . சூப்பர் பாஸ்!
– ச.ஸ்ரீராம்

Leave a Reply

0
%d bloggers like this: