ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம்: சூறாவளி பேரணிகளில் பங்கேற்கும் கெஜ்ரிவால்!

புதுதில்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, நாடு முழுவதும் அடுத்த நான்கு வாரங்களில், ஆறு பேரணிகளில் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் பங்கேற்கிறார்.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி அறிவித்தார்,. இதை பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்த உத்தேசித்துள்ளது.
இது தொடர்பாக தில்லியில் இன்று அக்கட்சித் தலைவர் ஆஷிஷ் கேதான் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் என்ற பெயரில் நடைபெறும் இந்த 8 லட்சம் கோடி ரூபாய் ஊழலை எதித்து நவம்பர் 28-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆம் ஆத்மி கட்சி போராட்டங்களை நடத்த உள்ளது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் மீரட், வாரணாசி மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் முறையே டிசம்பர் 1,7 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும், போபால், ராஞ்சி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் முறையே 20,22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு கேதான் தெரிவித்தார்.

Leave a Reply

%d bloggers like this: