நான் என்ன ரோபோவா… மஞ்சிமாவிடம் சிம்பு அதிரடி பதில்..

சென்னை: நான் ரோபோ கிடையாது. தயார் என்று மனசு சொன்னால்தான் சூட்டிங்கிற்கு வருவேன் என்று சொன்னார் என ரகசியத்தை தூக்கி போட்டு உடைத்துள்ளார் மஞ்சிமா மோகன்.

என்ன விஷயம் என்றால்… சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்த அச்சம் என்பது மடமையடா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிம்பு பற்றி நாம் அனைவரும் அறிந்ததுதான். சூட்டிங்கிற்கு தாமதமாகத்தான் வருவார்.

இதுகுறித்து ஒருநாள் மஞ்சிமா சிம்புவிடம் ‘ஏன் படப்பிடிப்பிற்கு தினமும் லேட்டாக வருகிறீர்கள்’ என்று கேட்டுள்ளார். அதற்கு சிம்பு ‘என்னால் ரோபோ மாதிரி இருக்க முடியாது.
படப்பிடிப்புக்கு ரெடி என்று தோன்றிய பிறகே வருவேன்’ என்று சொன்னாராம். அதை இப்போது எல்லோரிடமும் சொல்லிட்டார் மஞ்சிமா…

சிம்பு எத்தனை லேட்டாக வந்தாலும் ஒரு டேக் மேல் வாங்காமல் நடித்து முடித்துவிடுவார் என்றும் பாராட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

0
%d bloggers like this: