ஹாலிவுட் சண்டை கலைஞர்கள்… அஜித் படத்தில் பங்கேற்பாம்..

சென்னை: அஜித் படத்தின் படப்பிடிப்பு பற்றி தினமும் ஒரு செய்தி வந்தால்தான் அவரது ரசிகர்களுக்கு தூக்கமே வரும். இதோ அவர்களுக்காக ஒரு செய்தி..

சிவா இயக்கத்தில் இப்போது அஜித் நடித்து வரும் படத்தில் ஹாலிவுட் சண்டை கலைஞர்கள் பங்கேற்ற போறாங்க என்று தகவல் கசிந்துள்ளதுங்க…

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. 50 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.

இது முடிந்தால் ஏறத்தாழ படமே முடிந்தது போல். அப்புறம் சென்னையில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு படப்பிடிப்பை பினிஷ் செய்ய இருக்காங்க…
இப்படம் ஐரோப்பாவில் தொடங்கும்போது, அங்கு நடக்கும் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவும், ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் வீரம் கணேசும் கவனித்து கொண்டனர்.

இப்போது பல்கேரியாவில் நடைபெற்று வரும் சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் படங்களில் புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களை வைத்து எடுக்க இருக்காங்களாம். ஷிவாய் படத்திற்கு சண்டைக் காட்சிகளை அமைத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான் இவங்க என்று சொல்றாங்க…

156
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: