வருங்காலத்தில் பெரிய ஸ்டாராக வருவார்.. கோஹ்லி புகழும் அந்த இங்கிலாந்து வீரர் யார் தெரியுமா?

மொகாலி: இங்கிலாந்தின் இளம் வீரர் ஒருவர் பற்றி இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, புகழாரம் சூட்டினார். வருங்காலத்தில் அவர் ஸ்டாராக வருவார் என கோஹ்லி நம்பிக்கை தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது. போட்டிக்கு பிறகு, நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் ரவீந்திர ஜடேஜா மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்றார்.
பின்னர் கேப்டன் கோஹ்லியிடம் டிவி வர்ணணையாளர்கள் கருத்து கேட்டனர். குறிப்பாக இங்கிலாந்தின் 2வது இன்னிங்சில் கடைசிவரை போராடி 59 ரன்களுடன் நாட்-அவுட்டாக நின்ற ஹசீப் ஹமீது ஆட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டது.
Source: tamil.oneindia.com
கவுரவமான ஸ்கோர்
அவர் 156 பந்துகளை சந்தித்து முடிந்த அளவுக்கு ஸ்கோரை உயர்த்த முற்பட்டார். இதன் விளைவாக இந்திய அணிக்கு 2வது இன்னிங்சில் 103 ரன்களாவது இலக்காக நிர்ணயிக்க முடிந்தது இங்கிலாந்தால்.

முதல் தொடர்
19 வயதாகும் ஹசீப் ஹமீது, இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில்தான் சர்வதேச டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்தார். ஓபனரான அவர், காயத்தால் அவதிப்பட்டதால் 2வது இன்னிங்சில் அவரை 8வதாக களமிறக்கியது இங்கிலாந்து. காயம் அதிகரித்த நிலையில், அவர் லண்டனுக்கே திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

முதிர்ச்சியான ஆட்டம்
கோஹ்லி இதுகுறித்து கூறுகையில், ஹமீது விரைவில் குணமடைய வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். 19 வயதில் இவ்வளவு முதிர்ச்சியான ஆட்டமா என நான் வியந்து போனேன். அணிக்கு தேவை ஏற்பட்டபோது, அவர் தனது திறமை முழுக்க காண்பித்து விளையாடி உதவினார். 10வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் ஆன்டர்சனுடன் இணைந்து அவர் ஸ்கோரை உயர்த்திய விதம் மிகவும் முதிர்ச்சியாக இருந்தது. ஒரு கேப்டனாக இருந்து பார்த்த எனக்கு அவரது ஆட்டத்திறனை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.

வருங்கால ஸ்டார்
ஹமீது இதேபோல தனது திறமையை வெளிப்படுத்தினால் வருங்காலத்தில் அவர் ஒரு ஸ்டாராக மாற முடியும். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாக ஆட முடியும் என நம்புகிறேன். அவரது ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

Leave a Reply

%d bloggers like this: