ரூ.1.37 கோடி பணத்துடன் வேன் கடத்தல்: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூருவில் ஏ.டி.எம்.,மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1.37 கோடி பணத்துடன் வேன் கடத்தி செல்லப்பட்டது.கர்நாடக தலைநகர் பெங்களூரு அவின்யூவில் கே.ஜி., சாலையில் பாங்க் ஆப் இந்தியா உள்ளது. இந்த வங்கியிலிருந்து ஏ.டி.எம்.,மிற்கு பணம் நிரப்ப வேனில் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த வேனில் மொத்தம் ரூ.1.37 கோடி பணம் இருந்தது. வாகனத்தில் டிரைவர் மற்றும் போலீசார் உடன் வந்தனர். வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம். சென்றதும், போலீசார் மற்றும் அதிகாரிகள் இறங்கி ஏ.டி.எம்., மையத்தை சோதனை செய்ய சென்றனர். அவர்கள் சென்றதும், டிரைவர் வேனை அங்கிருந்து பணத்துடன் கடத்தி சென்றார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வேன் நகரை வெளியேற முடியாத நகையில் பெங்களூரு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடத்தி செல்லப்பட்ட வேனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

142
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: