ரூபாய் நோட்டு விளக்க கூட்டம்: பொதுமக்களை அனுமதிக்காத சாஸ்த்ரா பல்கலை… சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னை வாணி மஹாலில் நடைபெறும் ரூபாய் நோட்டு வாபஸ் விளக்க கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 8 ஆம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. எதிர்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ‘ரூபாய் நோட்டு வாபஸ்: காரணங்கள்…கவலைகள்..விளைவுகள். என்ற தலைப்பில் சாஸ்த்ரா பல்கலைகழகம் சார்பில் சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மஹாலில் இன்று மாலை ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆடிட்டரும், பத்திரிகையாருமான குருமூர்த்தி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிகழச்சி குறித்த அறிவிப்பு சில நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. அதில் ‘அனைவரும் வருக (‘All are welcome’) என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் வாணி மஹாலில் மாலை 5 மணி முதல் குழுமத் தொடங்கினர். ஆனால் முன்னரே பதிவு செய்தவர்களை மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்க முடியும் என பல்கலை கழக நிர்வாகம் சார்பில் கெடுப்பிடி செய்யப்படுவதால், நூற்றுக்கணக்கானோர் அதிருப்தி அடைந்தனர்.
முன்பதிவு பற்றி முன்பே எந்த ததகவலும் சொல்லாமல் தற்போது உள்ளே அனுமதிக்க மறுப்பது சரியா என பலரும் கோபத்துடன் சண்டையிட்டு ஆவேசமாக உள்ளனர். இதையடுத்து தற்போது கூடுதல் நாற்காலி போடப்பட்டு உள்ளே ஆட்களை அணுமதிக்கின்றனர். இருப்பினும் வெளியில் கூட்டம் இருக்கவே செய்கிறது. இதனால் வாணி மஹால் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: