ரூபாய் நோட்டு மாற்றம்: வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி!

மும்பை: ரூபாய் நோட்டு மாற்ற விவகாரத்தால் வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு படுவீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.85ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஆட்டம் கண்டு வருகின்றன. நேற்று முதல் பங்குச் சந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
மேலும் அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருவதால் டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவை எதிர்கொண்டு வருகிறது. இன்று வர்த்தகத்தின் முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ68.85 ஆக இருந்தது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதேபோல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.85 ஆகி பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. தற்போதைய நிலை தொடருமேயானால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மிகவும் மோசமாக 70.50 என்ற நிலைக்கும் போகக் கூடிய வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான விவாதத்தில் ராஜ்யசபாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2% பாதிக்கும் என எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

145
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: