ரூபாய் நோட்டு பிரச்னை- திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து பத்து நாட்கள் கடந்தும், நிலைமை இன்னும் சீராக இல்லை. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, வரும் 24-ம் தேதி திமுக மாநில அளவிலான ‘மனிதச் சங்கிலி போராட்டம்’ நடத்தும் என்று தெரிவித்துள்ளது.

இது பற்றி திமுக தலைவர் மு.கருணாநிதி,’500,1000 நோட்டுகள் செல்லாது என, திடீரென்று செய்த அறிவிப்பின் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை. இதனை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 24-ம் தேதி திமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும். மனிதச் சங்கிலியில் கழகத் தோழர்கள், பொது மக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட அனைவரும் பங்கேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

181
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: