ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதில் வங்கி அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

புதுதில்லி: ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதில் மக்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், நோட்டுகள் மாற்றுவதில் வங்கி அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதையடுத்து வங்கி ஊழியர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்து நோட்டுகளை மாற்ற முடியாமல் திரும்பிப் போய்விடுகிறார்கள். இந்த சிக்கல் வங்கி அதிகாரிகள் தனிப்பட்டவர்களுக்கு பெரும் தொகையை மாற்றிக்கொடுப்பதால்தான் வருகிறது என்ற புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு தெரிய வந்துள்ளது.
சில அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் படும் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வங்கி அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பணம் மாற்றுவதற்கு மட்டுமே வங்கி அதிகாரிகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தனிப்பட்டவர்களுக்கு பணம் மாற்றி கொடுப்பது கண்டு பிடிக்கப்பட்டால் வங்கி அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பணம் மாற்றிக்கொடுத்ததற்கான கணக்குகள் மிக தெளிவாகவும் சரியாகவும் இருக்க வேண்டும். வங்கி கணக்குகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கி அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

111
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: