ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள் – நளினியின் புதிய நூல் வெளியீடு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் சுயசரிதை புத்தகம் இன்று
‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்’ என்ற பெயரில் நளினி பல்வேறு சம்பவங்களை தொகுத்துள்ளார். மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் இதனை தொகுத்துள்ளார். அதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், பிரியங்கா காந்தியை சந்திக்கும் சக்தி தனக்கு துளியளவும் இல்லை என்றும், பிரியங்காவை சந்தித்தவுடன் தான் தேம்பி தேம்பி அழுததாகவும் நளினி குறிப்பிட்டுள்ளதாகவும், பிரியங்கா அழுததை தன்னால் தாங்க முடியவில்லை எனவும், அந்த புத்தகத்தில் நளினி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யாழ் பதிப்பகம் என்ற பதிப்பகத்தின் மூலமாக இந்த புத்தகம் வெளியீடு நிகழ்ச்சி இன்று மாலை சென்னை வடபழனியில் நடந்தது. புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். அதன் முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சி திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

169
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: