ம.ந.கூட்டணி குறித்து தா.பாண்டியன் கூறியது அவரது சொந்த கருத்து: ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம்

புதுச்சேரி: மக்கள் நலக் கூட்டணி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறியது அவரது சொந்த கருத்தாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மக்கள் நலக் கூட்டணியின் தற்போதைய நிலைகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மக்கள் நலக் கூட்டணியைப் பற்றி அதில் உள்ள நால்வரிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் அந்த அணியில் உள்ளாரே என மீண்டும் கேள்வி எழுப்பியபோது, தான் மக்கள் நலக் கூட்டணியின் தொடக்கத்தில் இருந்தே எதிலும் கலந்துகொள்ளவில்லை என்பதால், அந்தக் கூட்டணி உள்ளதா என்பது குறித்து தனக்குத் தெரியாது என பதிலளித்தார் தா.பாண்டியன்.
இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், மக்கள் பிரச்சனைகளுக்காக தற்போது மக்கள் நலக் கூட்டணி கூட்டு இயக்கமாக செயல்படுகிறோம். தேர்தல் நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியாக செயல்பட்டோம் எனத் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் டிச.6ல் விசிக நடத்தும் பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும், மக்கள் நலக் கூட்டணி குறித்து தா.பாண்டியன் கூறியது அவரது சொந்த கருத்து எனவும் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
Source: tamil.oneindia.com

130
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: