மோகன்லாலுக்காக சிரஞ்சீவி வைத்த வேண்டுகோள்..!

தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வெளியான சூப்பர்ஹிட் படம் தான் ஜனதா கேரேஜ்.. ஜூனியர் என்.டி.ஆர்-மோகன்லால் இணைந்து நடித்த படம்.. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவான இந்தப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது உலகமறிந்த கதை.. நாமும் அதைப்பற்றி மீண்டும் பேசப்போவதில்லை.. விஷயமும் வேறு.. ஏற்கனவே பிரபாஸ், மகேஷ்பாபு தற்போது ஜூனியர் என்.டி.ஆர் என டோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களின் படங்களை இயக்கிவிட்ட கொரட்டாலா சிவா அடுத்ததாக ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். இந்தப்படத்திலும் நாயகனை தவிர இன்னொரு முக்கியமான சீனியர் கேரக்டர் ஒன்று இருக்கிறதாம். இந்தக்கதையை கேட்ட ராம்சரனின் தந்தை சிரஞ்சீவி, அந்த கேரக்டர் மோகன்லாலுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறி அவரை எப்படியாவது இந்தப்படத்தில் கொண்டு வந்துவிடுங்கள் என்று இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம்.
‘ஜனதா கேரேஜ்’ படம் நூறு கோடி ரூபாய் கலெக்சனை தொட்டதற்கு மோகன்லால் தான் முக்கிய காரணம்..இதற்கு முன் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த படங்கள் நூறு கோடி என்கிற இலக்கை எட்டியதே இல்லை.. அதனால் ராம்சரணுடன் மோகன்லாலும் இணைந்து நடித்தால் படத்தின் வேல்யூவும் பிசினஸும் இன்னும் அதிகமாகுமே என்பதுதான் சிரஞ்சீவியின் எண்ணமாம்.. கூடவே அல்லு அர்ஜுன் போல ராம்சரணுக்கு மலையாளத்திலும் ஒரு டப்பிங் மார்க்கெட்டை உருவாக்கிவிடலாம் என்பது அவரது திட்டத்தில் உண்டாம்.

105
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: