மருமகனுக்கு கல்தா… மாமாவுக்கு என்ட்ரி… இளைய தளபதி படத்தில்தான்…

சென்னை:ஐயோ… போச்சே… ஐயோ… போச்சே என்று புலம்பாத குறைதான் இனி ஜி.வி. பிரகாசிற்கு என்று கோலிவுட் உளவாளி உலகநாதன் சொல்லியிருக்கார். மருமகன் போயி மாமா வந்துட்டாரு… என்னா மேட்டருன்னு விசாரிச்சா…

இளைய தளபதி விஜய் தனக்கு எது சரி என தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். பல முன்னணி இயக்குனர்கள் கியூவில் காத்திருக்கும் போது தன் படத்தை இயக்க பரதனுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இப்போது அட்லீ-விஜய் அடுத்து இணையும் படத்தில் முதலில் ஜி.வி தான் இசையமைப்பாளர் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் என்ன நடந்ததோ… மருமகன் போய் தற்போது மாமா அந்த இடத்திற்கு வந்து விட்டார்…
என்னங்க புரியலையா… இப்போ.. இசையமைக்க போறது ஏ.ஆர்.ரஹ்மான்ங்க…

அப்போ… விஜய்க்காக சமூக வலைத்தளங்களில் எல்லாம் வீணாக போச்சே… ஐயோ… போச்சே என்று இனி ஜி.வியின் புலம்பல் கேட்கலாம் என்கிறார்கள்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: