மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் லடாய் நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில்

புதுடில்லி: கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலில் இடம்பெற்ற, 43 பேரின் நியமனத்தை ரத்து செய்த, மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

லடாய்:

ஐகோர்ட்களில் காலியாக உள்ள நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஐகோர்ட்களில் நீதிபதிகளாக நியமிக்க 77 பேரது பட்டியலை சுப்ரீம் கோர்ட்டின் கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 34 பேரது பெயரை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 43 பெயரை திருப்பி அனுப்பியது. இதனை கடந்த 11ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தாக்கூர் கூறுகையில், 43 நீதிபதிகள் பெயரை நிராகரித்த மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது. அவர்களின் பெயர்களை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி, இந்த பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: