மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்: பிரணாப்பிடம் மம்தா கோரிக்கை

நாடாளுமன்றத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பகவந்த் மன், சந்திரகாந்த் கைரே, சிவசேனை எம்.பி.க்கள் ஹர்ஷல், கஜானன் கிர்திகர், தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவர்கள் சந்தித்தனர். அப்போது, அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை உள்ளடக்கிய 5 பக்க மனுவை பிரணாப் முகர்ஜியிடம் மம்தா அளித்தார்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: