மதுபானக்கடை கட்ட எதிர்ப்பு – பெண்கள் சாலை மறியல்

திண்டுக்கல் சின்னாளப்பட்டி – மேலக்கோட்டை சாலையில் அரசு மதுபானக்கடை கட்டுவதற்க்கு மேலக்கோட்டை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் செய்தனர். பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பூஞ்சோலை கிராமத்தில் 3142 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காந்தி கிராம சுடுகாடு பக்கத்தில் கடையை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கு காந்தி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அம்பாத்துறை என்ற இடத்தில் கடையை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மதுபானக் கடை திறக்கக் கூடாது என்று மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சின்னாளப்பட்டி – மேலக்கோட்டை சாலையில் அரசு மதுபானக்கடை கட்டுவது என முடிவு செய்ப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். சின்னாளப்பட்டி காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன், பொதுமக்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தார்.
சக்தி

Related videos

Leave a Reply

%d bloggers like this: