பைரவாவில் விஜய் பாடும் ‘அசத்தல்’ பாட்டு!

தமிழ் சினிமாவில் செம டான்ஸ் ப்ளஸ் பாட்டுப் பாடும் திறமை வாய்ந்த ஹீரோக்கள் ஒரு சிலருக்குத்தான். அப்படிப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் விஜய்.
தனது முதல் படத்திலிருந்தே தனது படங்களில் ஒரு பாடலைப் பாடி வருகிறார். அவர் பாடும் பாடல்கள் ஹிட்டடித்தும் விடுகின்றன.
எனவே இப்போது அவர் நடித்து வரும் பைரவா படத்திலும் விஜய் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
சந்தோஷ் நாராயணனும் – விஜய்யும் முதல் முறையாக இணைந்துள்ள படம். சந்தோஷ் நாராயணன் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள படமும்கூட.
‘இந்தப் படத்துக்காக விஜய் பாடியுள்ள பாடல், அருமையாக வந்துள்ளது. அதிரவைக்கும் நடனம் உத்தரவாதம்,’ என்று கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.
தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து ஏழாவது முறையாகப் பாடியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் 2017 விருந்தாக வருகிறது பைரவா!

241
-
100%
Rates : 1

Leave a Reply

%d bloggers like this: