பார்லி.,யை தொடர்ந்து முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி

புதுடில்லி : 10 நாட்களுக்கும் மேலாக பார்லி., கூட்டத்தொடர் முடக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16ம் தேதி துவங்கி, டிசம்பர் 16 ம் தேதி வரை நடக்கிறது. கூட்டத் தொடர் துவங்கிய முதல் நாளில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இடை விடாத அமளியால், இருஅவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்படுகின்றன. இந்நிலையில் நவம்பர் 28 ம் தேதி, கடும் அமளிக்கு இடையே திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
இதில், தாமாக முன்வந்து கணக்கில் காட்டப்பட்ட வருமானத்திற்கு 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் எனவும், கணக்கில் காட்டப்படாத தொகை வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால் 85 சதவீதம் வரை வரிவிதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.கறுப்பு பணம் வைத்திருப்போருக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தப்பட்ட வருமான வரித்துறை சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. ரூபாய் நோட்டு விவகாரத்துடன் சேர்த்து, புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வருமான வரி சட்ட திருத்தத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து, கூச்சல் குழப்பம் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இன்று எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசித்து வருகின்றன. இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இப்பிரச்னைகள் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க எதிர்கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

105
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: