பாடம் நடத்தும் பாண்டியராஜன்

எதை செய்ய வேண்டும் என்பதை விட, எதை செய்யக் கூடாது என்பதை தான், நான் முதலில் சொல்லித் தருவேன், என, நடிகர் பாண்டியராஜன் கூறினார். அவர் கூறியதாவது: என் குரு நாதர் பாக்யராஜிடம், உதவி இயக்குனராக இருந்துள்ளேன். பல படங்கள் இயக்கி, நடித்து உள்ளேன். சினிமாவின் அடிப்படை விஷயங்களை, மற்றவர்களுக்கு கற்று தருகிறேன். எந்த இடத்தில் கேமராவை வைக்க வேண்டும் என்பதை விட, எந்த இடத்தில் வைக்கக் கூடாது என்பதையே, முதலில் சொல்லித் தருவேன். எனக்கு தெரிந்ததை, மற்றவர்களுக்கு சொல்லி தருகிறேன். இதற்கு, ஆர்வம் தான் முதல் தகுதி. டிச., 3 முதல், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை, 8:00 மணி முதல், 9:30 மணி வரை பாடம் எடுக்க உள்ளேன்.
ஒரு மாதத்திற்குள், என் பாடம் முடிந்து விடும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படும். என் வகுப்பிற்கு வந்த பின், சினிமாவை மேலோட்டமாக பார்ப்பதை விடுத்து, துல்லியமாக உணர்வர். இவ்வாறு அவர் கூறினார்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: