பாஜக தலைவரின் சகோதரரிடம் ரூ.31 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல்

வதோதரா: குஜராத் பாஜக தலைவரின் சகோதரர் வீட்டில் இருந்த ரூ.31 லட்சம் பழைய நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் குற்றப்பிரிவு போலீஸா விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வபோது எந்தவொரு ஆவணமும் இன்றி அதிகளவு கொண்டு செல்லப்படும் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டும் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத்தில் உள்ளூர் பாஜக தலைவரின் சகோதரர் வைகாந்த் பவார் வைத்திருந்த ரூ.31 லட்சம் மதிப்பிலான பழைய நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகாந்த் பவார் அவருடைய வீட்டில் பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக நாங்கள் திடீர் சோதனை நடத்தினோம். அப்போது பாஜக உள்ளூர் தலைவர் விஜய் பவாரின் சகோதரர் வைகாந்த் பவாரை பிடித்தோம் என்று காவல்துறை இணை ஆணையர் டி.ஜே. படேல் தெரிவித்தார். விஜய் பவார் வதோதரா நகராட்சி உறுப்பினராக இருந்து வருகிறார்.
இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீஸாரால் இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விஜய் பவார் கூறுகையில், இது தொடர்பாக எந்தவொரு தகவலும் எனக்கு தெரியாது. அவர் என்னுடைய சகோதரர்தான். வைகாந்த் பவார், அவனுக்கு விரும்பிய பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதால் 1995-ம் ஆண்டில் இருந்து எங்களுக்குள் நெருங்கிய தொடர்பு எதுவும் கிடையாது. என்று கூறியுள்ளார்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: