“நயன்தாரா அழைத்தால் செல்வேன் ” – சிம்பு

சென்னை : சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. அவர் நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கூப்பிட்டால் போவேன்

இந்நிலையில் சிம்புவிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் ‘நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் அடுத்த வருடம் நடைபெறும் என்று கூறப்படுகிறதே. அவர்கள் திருமணத்திற்கு செல்வீர்களா? என்று கேட்டனர். இந்த கேள்விக்கு பதிலளித்த சிம்பு, ‘விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே தனக்கு நல்ல நண்பர்கள்.
என்னை திருமணத்திற்கு அழைத்தால் கண்டிப்பாக செல்வேன்’ என்று கூறினார். சிம்புவின் ‘போடா போடி’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் தனக்கு யாருடனும் போட்டி போட்டு நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், ரசிகர்களுக்கு நல்ல படத்தை கொடுக்கும் நோக்கம் மட்டுமே தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

183
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: