துரோகிகளை எல்லாம் துவம்சம் பண்ணுங்கள்: நடிகர் சங்க பொதுக்குழுவில் வடிவேலு

துரோகிகளை எல்லாம் துவம்சம் பண்ணுங்கள் என்று நடிகர் சங்கப் பொதுக்குழுவில் வடிவேலு தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்று வருகிறது, இப்பொதுக்குழு கூட்டத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இப்பொதுக்குழுவில் கலந்து கொண்டு வடிவேலு பேசியது, “சரோஜாதேவி போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டது சந்தோஷத்தை அளிக்கிறது. இந்த அணி நல்லது தானே செய்கிறார்கள், அதை கெடுப்பதற்கு பலர் அலைகிறார்கள். நடிகர் சங்கத்தை கட்டியே தீருவோம் என்று சொல்கிறார்கள், அதை தடுப்பதற்கு ஒரு அணி கிளம்பியிருக்கிறது.
இடையே தற்போது இன்னொரு இடத்தை காணும் என்கிறார்கள். இந்த அணிக்கு வேலைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதை கண்டுபிடிக்க கிளம்ப வேண்டியதிருக்கிறது.
விஷால், கார்த்தி, நாசர் அண்ணன், கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட இந்த அணியினர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும்வரை நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதற்கு பெரியவர்கள் எல்லாம் வாழ்த்துங்க, இளைஞர்கள் எல்லாம் கைகொடுங்க, எதிரிகளை எல்லாம் உதறிவிடுங்க, துரோகிகளை எல்லாம் துவம்சம் பண்ணுங்கள்” என்று தெரிவித்தார்.

115
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: