தீவிரவாதிகள் தாக்குதல் : 7 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில், ராணுவ முகாமில் இன்று திடீரென்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இவற்றில் இரண்டு பேர் ராணுவ அதிகாரிகள், ஐந்து பேர் ஜவான்கள். இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். முக்கியமாக இவர்கள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், 16 பிஸ்டல் துப்பாக்கிகள், 31 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இருந்து 2 பெண்கள், 2 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் மேலும் பல தீவிரவாதிகள் ஊடுருவதாகவும், இதனால் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: