தனியார் மருத்துவமனைகள் பழைய ரூபாய்களை வாங்க வேண்டும் : டெல்லி அரசு உத்தரவு

டில்லி: ‘ டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள், நோயாளிகள் அளிக்கும் காசோலைகள், வரைவோலைகளை வாங்க வேண்டும். இணையம் மூலம் பணம் செலுத்துவதையும் ஏற்க வேண்டும்’ என, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

காசோலை வாங்க உத்தரவு:

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்திற்கு பிறகு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு மருத்துவமனைகள் வாங்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளிடம் இருந்து காசோலைகள், வரைவேலைகளை வாங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது.

குற்றசாட்டு

இத்துடன், இணையம் மூலம் பணம் செலுத்தவும் அந்த மருத்துவமனைகள் அனுமதிக்கவில்லை.
ரொக்கமாக தரவேண்டும் என வற்புறுத்துகின்றன. குறிப்பாக, டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் இதுபோல் செயல்படுகின்றன என குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து டில்லி மாநில அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ‘காசோலைகள், வரைவோலைகளை வாங்க வேண்டும். இணையம் மூலம் பணம் செலுத்துவதையும் ஏற்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: