டெல்லியில் பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு !

டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில்கேட்ஸ் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பில்கேட்ஸ் ஒரு முறை டெல்லி வந்த போது, பிரதமர் மோடி அறிவித்துள்ள கிளீன் இந்தியா திட்டத்தை தான் பாராட்டுவதாகவும், மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கான ஒரு முன் முயற்சியே கழிவறைகள் கட்டுவது என்றும் தெரிவித்திருந்தார். பில்கேட்சின் பில் – மெலின்டா பவுண்டேஷன் கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளது.

Leave a Reply

%d bloggers like this: