சோனியாவுக்கு காய்ச்சல்: ஆஸ்பத்திரியில் அனுமதி

புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவுக்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். யாரும் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.ஆர்வம் இல்லைசமீப காலமாக சோனியா, கட்சி பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கூட அவர் பங்கேற்கவில்லை. ராகுலே தலைமை வகித்தார். ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக சோனியா பார்லி.,யில் பங்கேற்று பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இதனையும் தவிர்த்தார். இந்நிலையில் அவர் காய்ச்சல் மற்றும் தொற்று காரணமாக டில்லி ராம் கங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் கட்சி தரப்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

Related videos

Leave a Reply

%d bloggers like this: