சீரியல் நடிப்பை கைவிட்டார் ஷபானா

தேவதை, தாமரை தொடர்களில் நடித்தவர் ஷபானா. மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். இனி தொடர்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு தொகுப்பாளினியாகவே தொடர இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது… நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதால் நடிப்பதற்கு நேரம் இல்லை. அதனால்தான் சீரியல்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். நிகழ்ச்சி தொகுப்பில் பல புதுமைகளை செய்யும் திட்டம் வைத்திருக்கிறேன். அதோடு எனக்கு சின்ன வயதிலிருந்தே பேஷன் டிசைனிங்கில் ஆர்வம் அதிகம். அதிலும் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன். இப்போது எனது உடைகளை நானே வடிவமைக்கிறேன். இனி மற்றவர்களுக்கும் செய்ய இருக்கிறேன். என்கிறார் ஷபானா.

Related videos

Leave a Reply

%d bloggers like this: