சிங்கம்-4 ஆகப்போவது யாரு… யாரு… ஹரி கையில் இருக்கு… இருக்கு..

சென்னை :சிங்கம்-4க்கு இப்போவே அட்வான்ஸ் கொடுத்து ஹரியை ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் புக் செய்ய… சிங்கமாக போவது யார் என்ற பரபரப்புதான் இப்போது கோலிவுட்டில எழுந்துள்ளது.

கிடுகிடுவென்ற திரைக்கதை, சென்டிமென்ட், ஆக்சன், ரொமான்ஸ் என்று சரி விகிதத்தில் கலந்து கொடுத்து படத்தை ஹிட் அடிக்க செய்வதில் ஹரிக்கு நிகர் அவர்தான். இப்போதான் சிங்கம்-3 முடிந்திருக்க… அதற்குள் அவருக்கு சிங்கம் 4 பகுதிக்கான அட்வான்சை கொடுத்துவிட்டதாம் ஒரு பெரிய கம்பெனி. அதுவும் 2 கோடியாம்!

இப்போ சிங்கம் 4 ல் நடிக்கப் போகும் ஹீரோ யார் என்பதில்தான் ஒரே குழப்பம். விஜய் ஹரி சந்திப்பு நடந்து,அதுவும் பாசிட்டிவ்வாக பதில் வந்து பல மாதங்கள் ஆச்சு.
இருந்தும் அறிவிப்பு தள்ளிக்கிட்டே போகுது.

காரணம் என்னன்னா… சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால், ஹரி ஒரு ரிங் மாஸ்டர்தான். செல்போன் யூஸ் செய்யக்கூடாது என்று ஆரம்பித்து பல கெடுபிடி இருக்கும். சின்ன நடிகர், பெரிய நடிகர் என்று பார்க்க மாட்டார்.

அதனால்தான் விஜய்யுடன் சேர்ந்து படம் செய்ய முடியாத நிலை என்கிறார்கள். அப்படி இருக்க… இப்போ… விஜய் லெவலோ… எங்கேயோ இருக்க… சிங்கம்-4க்குள் விஜய்யை இழுத்துவிடுவாரா ஹரி என்று எதிர்பார்க்கிறது கோலிவுட்.

ஹரிக்கு அட்வான்சை கொடுத்த அந்த தயாரிப்பாளரோ ‘விஜய்யா, சூர்யாவா? அது உங்கள் விருப்பம்’ என்று கூறிவிட்டதாம்!

224
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: