‘சிகா வைரஸ் அவசரநிலையை கடந்துவிட்டது’

உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிகா வைரஸ், அவசரநிலையை கடந்துவிட்டது என்று கூறியுள்ளது, உலக சுகாதார அமைப்பு. இருப்பினும், இந்த வைரஸ் பரவுவதை தடுப்பது சவாலான விஷயமாக உள்ளது எனவும் கூறியுள்ளது.

சிகா வைரஸ் கர்ப்பமாக இருக்கும் பெண்களை ஒரு வித கொசு கடிப்பதால் தான் பெரும்பான்மையாக பரவுகிறது. சிகா வைரஸினால் பாதிக்கப்படும் நிலையில், பிறக்கும் குழந்தை சிறிய அளவிலான மூளை மற்றும் தலையுடன் பிறக்கும் என சொல்லப்படுகிறது. இதை microcephaly என்று அழைக்கிறார்கள்.

2015ல் இந்த வைரஸ் முதல் முறையாக பரவத்தொடங்கியதிலிருந்து, கிட்டதட்ட 15 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் அதிகமாக பிரேசில் நாட்டைத் தான் பாதித்தது.
ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இன்னும் உணரப்பட்டு தான் வருகிறது.

இது பற்றி பிரேசில் அரசு,’நாங்கள் இந்த வைரஸுக்கான அவசரநிலை பிரகடனத்தை, கட்டுக்குள் கொண்டுவரும் வரை வைத்திருப்போம்.’ என்று கூறியுள்ளது.

151
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: