சம்பள நாள் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் ‘கவுன்ட்டர்’

புதுடில்லி : நாளை சம்பள நாள் என்பதால், மாத சம்பளம் பெறுவோரின் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க மத்திய அரசு, வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதால், மாத சம்பளம் பெறுவோருக்கு நாளை சம்பளம் கைக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என தகவல் வெளியானது. இதனால் மாத சம்பளம் பெறும் ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் கலக்கம் அடைந்தனர். ஆனால், அது போன்று எந்த சிரமும் ஏற்படாது, வழக்கம் போல் சம்பளம் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பிலும், வங்கிகள் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாத சம்பளம் கிடைப்பதில் சிரமம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம் வழக்கம் போல் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதனை ஊழியர்கள் சிரமமின்றி எடுத்துக் கொள்ள வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.500, 2000 நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி மட்டுமே. இதனால் மாத சம்பளதாரர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று காலை முதல், நவம்பர் மாத சம்பளத்தில் ரூ.3000 முன்பணமாக வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் இந்த அறிவிப்பால் சுமார் 1.40 லட்சம் பணியாளர்கள் பயன் பெற உள்ளனர்.

164
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: