சக்திகாந்த தாஸின் இன்றைய அறிவிப்புகள் கூறுவது என்ன?

புதுதில்லி: அனைத்து அரசு அலுவலகங்களும் மின்னணு முறையில் மட்டும் பண பரிவர்த்தனை நடத்த அரசு அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக
பொருளாதார விவாகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்குமாறு கோரிய அரசு ஊழியர்களின் கோரிக்கையையும் நிராகரித்ததுடன் மின்னணு முறையில் மட்டுமே செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இன்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அளித்த முக்கிய தகவல்கள் விவரம்:
– நபார்டு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க உத்தரவு.
– நபார்ட்டு வங்கி மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
– கிராம கூட்டுறவு வங்கிகள் வரை பணம் விநியோகிக்க நடவடிக்கை
– கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடன் விரைந்து வழங்கிட துரித நடவடிக்கை
– டெபிட் கார்டுகள் பயன்படுத்துவோருக்கான சேவைகட்டணம் டிசம்பர் 31 வரை ரத்து
– ரயில்வே ஆன் லைன் இ டிக்கெட்டுகளுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை சேவை கட்டணம் ரத்து
– ஏடிஎம் டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கான சேவைக் கட்டணம் டிசம்பர் 31-ம் தேதி வரை ரத்து
– சுங்க சாவடியில் மின்னனு முறையில் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்படுகிறது.

  • மின்னணு பண பரிவர்த்தனையை விரிவு படுத்துவதே அரசின் திட்டம்.
  • அனைத்து அரசு அலுவலகங்களும் மின்னணு முறையில் மட்டும் பண பரிவர்த்தனை செய்ய உத்தரவு
  • வரும் 1-ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கபட மாட்டாது.
  • மொபைல் பேங்கிங்’ உள்ளிட்ட வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரத்து
  • புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில், நாடு முழுவதும் மொத்தமுள்ள 2.2 லட்சம் ஏடிஎம் இயந்திரங்களில் 82,500 இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன போன்ற முக்கிய தகவல்களை சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.
    ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகள் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
112
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: