கை நிறைய வாய்ப்புகள்: அசத்தும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு!

யோகி படத்தில் அறிமுகமாகி, காக்கா முட்டை படத்தில் கவனம் பெற்று அடுத்ததாக ரெமோ, ஆண்டவன் கட்டளை படங்களில் அசத்தலாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு இன்றைய தேதிக்கு அதிகப் படங்களில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.
ஆண்டவன் கட்டளை படத்தில் இவர் பேசுகிற ஒவ்வொரு வசனத்துக்கும் ரசிகர்களின் கைத்தட்டல் கிடைத்தது. இதைக் கவனித்த நடிகர்களும் இயக்குநர்களும் தங்களுடைய படங்களில் யோகி பாபுவை நடிக்க வைக்க ஆர்வம் காண்பித்துவருகிறார்கள். வடிவேலு, சந்தானம், சூரி என சமகால நகைச்சுவை நடிகர்களின் சாயல் இன்றி தனித்துவமாக அவருடைய நகைச்சுவைக் காட்சிகள் உள்ளதால் ரசிகர்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளார்.
ரெமோ படத்தில் இவர் தோன்றிய அனைத்து காட்சிகளுக்கும் கைத்தட்டல்களும் விசில்களும் கிடைத்தது இன்னொரு சான்று.
இந்நிலையில் தற்போது வீர சிவாஜி, அட்டி, வீரா, ஓடி ஓடி உழைக்கணும், நகர்வலம், மோ, ஆளுக்கு பாதி, சரவணன் இருக்க பயமேன் என வரிசையாகப் படங்களில் நடித்துவருகிறார் யோகி பாபு. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றைத் தயாரித்து நடிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். இதிலும் நகைச்சுவை நடிகராக ஒப்பந்தமாகியுள்ளார் யோகி பாபு. மேலும் பெரிய நடிகர்களின் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

123
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: