‘கர்ஜனை’ படப்பிடிப்பு துவங்கியது

இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற என்.ஹெச் 10 படத்தின் தமிழ் பதிப்பான ‘கர்ஜனை’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்தியில் நவ்தீப் சிங் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் அனுராக் காஷ்யப், விகாஸ் பாகல், அனுஷ்கா சர்மா, சுனில் லுல்லா என 6 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்த படம் என்.ஹெச் 10. 2015ல் வெளியான இப்படம் வர்த்தக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பினை பெற்றது.இதனையடுத்து தமிழில் த்ரிஷாவை வைத்து இப்படத்தினை மொழி மாற்றம் செய்யும் வேலை துவங்கியது. அமித் பார்கவா, வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, ‘மதுரை’ முத்து உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். ‘கர்ஜனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அறிமுக இயக்குநர் சுந்தர் இயக்கி வருகிறார்.

317
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: