கடும் போட்டியில் மஞ்சிமா மோகன்-சாய் பல்லவி!

கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தவர் மஞ்சிமா மோகன். அதையடுத்து விக்ரம் பிரபுவுடன் முடிசூடா மன்னன் படத்தில் நடித்தவர், இப்போது கெளரவ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் தீவிரமடைந்துள்ள மஞ்சிமா, வாலு டைரக்டர் விஜயசந்தர் விக்ரமை இயக்கும் படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்.இந்த நேரத்தில், பிரேமம் சாய் பல்லவியும் விக்ரம் நடிக்கும் அந்த படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து விட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதோடு, இந்த படத்தில் நடிக்க 35 லட்சம் மஞ்சிமா மோகன் சம்பளம் கேட்டு வரும் நிலையில், சாய் பல்லவியோ குறைவான சம்பளம் கொடுத்தாலும் நடிக்க தயாராக உள்ளாராம்.
இப்படி இரண்டு பேரும் விக்ரம் படத்தை கைப்பற்றி விட வேண்டும் என்று கடும் போட்டியில் இருப்பதால், இருவரில் யாரை புக் பண்ணுவது என்கிற ஆலோசனை தற்போது நடந்து வருகிறது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: