ஒரு மொழியில் அமலாபால், இரண்டு மொழிகளில் தமன்னா…!

2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற படம் – ‘குயின்’. விகாஸ் பால் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த கங்கனா ரனாவத் நடித்தார். அவரது நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. அது மட்டுமல்ல, சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது. இந்தப்படத்தின் கதையிலும், வெற்றியிலும் ஈர்க்கப்பட்ட பலர் குயின் ரீமேக் ரைட்ஸை வாங்க முயற்சி செய்தனர்.நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் பிரசாந்தின் அப்பாவுமான தியாகராஜனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. குயின் படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக் உரிமையை வாங்கினார் அவர்.
குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் எந்த கதாநாயகி நடிப்பார் என தெரியாமல் இருந்தது.இந்நிலையில், இப்படத்தின் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளுக்கான கதாநாயகிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளனர். நடிகை ரேவதி இயக்கத்தில் உருவாகும் ‘குயின்’ தமிழ் ரீமேக்கில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். மலையாளத்தில் அமலா பால் நடிக்கிறார். கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்கிறார்.’குயின்’ தெலுங்கு ரீமேக்கை அனிஸ் குருவில்லா இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கான கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சரியான கதாநாயகி அமையவில்லை என்றால், தமிழுக்கு ஒப்பந்தம் செய்த தமன்னாவையே தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகின்றனர்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: