ஒத்த பாட்டு கிளப்பிய சர்ச்சையால்… நொந்து போன சுந்தர்.சி

சென்னை: ஒத்த பாட்டுக்கு இம்புட்டு சர்ச்சையான்னு சுந்தர்.சி. நொந்து போய் கிடக்கிறாராம். என்ன விஷயம் தெரியுங்களா?

சுந்தர்.சி படங்களை தயாரித்தும், இயக்கியும், நடித்தும் வருகிறார். இப்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் சங்கமித்ரா என்ற படத்தை இயக்குவதில் பிஸியாக இருக்கார்.

தற்போது ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்தும், இசையமைத்து வரும் மீசையை முறுக்கு படத்தை தயாரித்துள்ளார் சுந்தர்.சி. இதன் போஸ்டர்கள், பாடல்கள் இணையதளங்களில் வெளிவந்தது செம வரவேற்றை பெற்றுள்ளது. இதனால் படத்தை ஹிட் ஆக்கியே ஆகவேண்டும் என்று ஆதி பாடல்களிலும் தீவிர கவனம் செலுத்தியுள்ளார்.

இந்த படத்தில் உள்ள சேட்ஜி பாடல் வைரலானாலும் அந்த சமூகத்தினரை கிண்டல் விமர்சனம் செய்வது போல் உள்ளது என எதிர்ப்பு கிளம்பிய கோர்ட் வரை சென்றுவிட்டது இந்த பிரச்னை.
கோர்ட் சுந்தர்.சி.க்கு நோட்டீஸ் அனுப்ப இப்போ… ஏன் பிரச்னைங்க என்று பாடலை இணையத்தில் இருந்து எடுத்துட்டாங்களாம்.

187
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: