ஏற்க முடியாது… ஏற்க முடியாது… நாட்டாமை தீர்ப்பை மாத்து… சரத் டென்ஷன்

சென்னை:முடியாது… முடியாது… ஏற்றுக் கொள்ள முடியாது என்று இப்போ கத்தி என்ன பிரயோசனம் சாரே… என்று கேட்கின்றனர் நடுநிலையாளர்கள். எதற்காக தெரியுங்களா?

நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் தலைவர் சரத்குமார் சொல்லியிருக்காருங்க…

தென்னிந்திய நடிகர் சங்க 67வது பொதுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நீரந்தரமாக நீக்கப்படுவதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அறிவித்தார்.

இதுக்குதான் இப்போது நடிகர் சரத்குமார் கூறும்போது,” தற்காலிக நீக்கம் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் , நிரந்தர நீக்கம் என்பது சட்டத்திற்கு உட்பட்டது இல்லை.
எனவே இதனை ஏற்றுக்கொள்ள இயலாது.

இந்த முடிவை நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக தீர்வு காண்போம் என்று சொல்லியிருக்காரு. அதெல்லாம் சரிதான். ஆனால் இப்போ கூப்பாடு போட்டு என்ன பிரயோசனம்… அப்பவே அனைவரையும் அரவணைத்து இருந்தால் இது நடந்து இருக்குமா என்று கேட்கின்றனர் நடுநிலையாளர்கள்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: