என்னை அடுத்த நஸ்ரியா என்கிறார்கள்! உற்சாகத்தில் அதிதி!!

தற்போது திரைக்கு வந்துள்ள பட்டதாரி படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் அதிதி. கேரளத்து வரவான இவர் அந்த படத்தின் பப்ளிசிட்டிகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தார். அதைப்பார்த்து அடுத்த சினேகா வந்து விட்டார் என்றுதான் கோலிவுட்டில் கிசுகிசுத்தனர். ஆனால், அதிதியோ, பட்டதாரி படத்தில் தன்னைப்பார்த்து விட்டு அடுத்த நஸ்ரியா என்று பலரும் சொல்வதாக என்கிறார்.இதுபற்றி அதிதி கூறுகையில், பட்டதாரி படத்தில் எனது நடிப்பை அனைவருமே பாராட்டுகிறார்கள். முதல் படத்திலேயே இப்படியொரு பாராட்டு கிடைத்திருப்பது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதிலும், என்னை சந்தித்தவர்கள், நஸ்ரியாவின் நடிப்பை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது. அதனால் அடுத்த நஸ்ரியாவாக நிறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
அதனால் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், அடுத்தடுத்து இன்னும் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.மேலும், தற்போது அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சந்தனத்தேவன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறேன். இதுதவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கதை கேட்டிருக்கிறேன். அதில் ஒரு பிரபல டைரக்டரின் படமும் ஒன்று. அந்த அளவுக்கு பட்டதாரி படம் என்னை ரசிகர்களிடம் மட்டுமின்றி சினிமாத்துறையினரிடமும் கொண்டு போய் சேர்த்திருக்கிறது என்று சொல்லும் அதிதி, தமிழில் வெற்றி பெற்ற பட்டதாரி படம், மலையாளத்திலும் வெளியாகிறது.

அதனால் இன்று நான் அந்த படத்தின் ப்ரமோஷனுக்காக யூனிட்டுடன் கேரளா செல்கிறேன் என்கிறார்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: