உ.பி. ரயில் விபத்து: பலி 120 ஆக அதிகரிப்பு

பாட்னா: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர், புகாரியன் அருகே, பாட்னா-இந்துார் விரைவு ரயில் இன்று (20-11-16) அதிகாலை 3 மணிக்கு தடம் புரண்ட விபத்தில் உயிரிழப்பு 120 ஆக உயர்ந்தது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தடம் புரண்ட 14 பெட்டிகள்14 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்தமாநில அரசு மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் மற்ற ரயில்கள் வேறு தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன.பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. ரயிலில் வந்தவர்கள் பலர் பஸ் மூலம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த ரயில் விபத்திற்கு, தண்டவாளங்களை முறையாக பராமரிக்கப்படாததே காரணமாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு ரயில் விபத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும். அகிலேஷ் உத்தரவுதகவல் அறிந்த மாநில முதல்வர் அகிலேஷ், மீட்பு பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார். மேலும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.

5 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இரங்கல்: ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரயில்வே அமைச்சர் கருத்து இவ்விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், ‘ மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.

3.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

114
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: