இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா

சென்னை: இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தமிழக காங்கிரஸ் கமிட்டி கொண்டுகிறது. இதன் துவக்க விழா நாளை நடைபெறுகிறது.
நாளை காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் தமிழக காங்கிரஸ் கமிட்டி, மாலை நான்கு மணிக்கு “அன்னை இந்திரா காந்தியும், இந்தியாவின் வளர்ச்சியும்” என்ற கருத்தரங்கை நடத்துகிறது.

இதில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட பலர் பங்கேற்கிறார்கள்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: