அவரும் அப்படி… இவரும் இப்படியா… ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

சென்னை: அவரும் அப்படி நடிக்கிறார்… இவரும் இப்படி நடிக்கிறாரா? என்று கோலிவுட் உளவாளி உலகநாதன் விஷயத்தை கிளறிவிட்டு போயிட்டார்.

என்ன விஷயம் என்கிறீர்களா? பைரவா படத்தின் டப்பிங் பணிகளில் விஜய் பிஸியாக இருக்கார். படத்தை வரும் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரப்போறாங்க… இதெல்லாம் தெரிந்த செய்திதான்.

இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் விஜய் கல்லூரி மாணவராக வரறார் என்பது புது செய்தி. இதற்காக தன் நடை, உடை என அனைத்தையும் மாற்றி நடிச்சிருக்கார் விஜய்.

இப்போ அந்த வரிசையில் சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க 10 கிலோ எடையை குறைத்து கல்லூரி மாணவனாக நடிக்கிறாராம்.
ஒரே டிரெண்டில் சூப்பர் நடிகர்கள் நடிப்பது அவர்களின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தானே…

107
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: