அரசு ஊழியர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது!

மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அரசு அலுவலகங்கள் மின்னனு முறையில் மட்டும் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அதன்படி வரும் 1-ம் தேதி அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்கப்படாது. ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோருக்கான சேவைக்கட்டணம் டிசம்பர் 31 வரை கிடையாது. மொபைல் பரிவர்த்தனைகளுக்கும் சேவை கட்டணம் இல்லை’, எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் 82,000 ஏ.டி.எம்கள் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். மேலும், சில நாட்களில் அனைத்து ஏ.டி.எம்களும் மாற்றியமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கும் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: