அரசுக்கு எதிராக டில்லியில் இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடில்லி : ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்றதாக மத்திய அரசு அறிவித்ததை கண்டித்து பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று (நவம்பர் 23) தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகின்றன.தர்ணா போராட்டம் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை காட்டி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் பார்லி., இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று எதிர்க்கட்சிகள் டில்லியில் நடத்தவிருக்கும் தர்ணா போராட்டம் குறித்த உத்திகளை வகுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். படிப்படியாக போராட்டம்கூட்டத்துக்கு பின்பு, காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நிருபர்களிடம் கூறும்போது, “நாளை (இன்று) காலை 9.45 மணி அளவில் பார்லி., வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரச்சினையில் நாங்கள் படிப்படியாக செல்வோம்” என்றார். மேலும் , “ஜனாதிபதியை சந்திப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எனினும் அவரை சந்திப்பதற்கான தேதி பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை” என்றார்.மம்தா தலைமையில் போராட்டம் : டில்லிக்கு புறப்படும் முன்பாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை(நவம்பர் 23) பகல் 12.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறேன். இதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்று ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சாமானிய மக்கள் படும் கஷ்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். பார்லி., மற்றும் சட்ட சபை இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பது மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான மக்கள் புரட்சி ஆகும். இதிலிருந்து பா.ஜ., பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

125
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: