அப்ப ரிஸ்க் எடுக்கலை… இப்ப எடுக்கறேனே… ஹீரோவான சந்தானத்தின் அதிரடி

சென்னை : சுகர் இருக்கிறவங்கதான் சுவீட் சாப்பிடக்கூடாது… காமெடியன்தான் ரிஸ்க் எடுக்கக்கூடாது… ஆனால் இப்ப இவரு காமெடியன் இல்லீயே… அப்ப ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட்டு தானே ஆகணும் …

ரிஸ்க் எடுக்கிறாராம் சந்தானம் :
நடிகர் சந்தானம் காமெடி ட்ராக்கிலிருந்து விலகி ஹீரோவாகிட்டார் . அப்போ இருந்தது போல் வந்து போக முடியுமா ? ரசிகர்கள் ஓரங்கட்டி வீட்டில் உட்கார வைத்து விடுவார்களே … அதனால் தான் தான் நடிக்கும் படங்களில் டான்ஸ் , பைட் காட்சிகளில் செமத்தியாக ரிஸ்க் எடுக்கிறாராம் சந்தானம் .
பொங்கல் வெளியீடாக ‘ சர்வர் சுந்தரம் ‘ :
இவரது ‘ சர்வர் சுந்தரம் ‘ படத்தில் நடித்து முடித்து படம் பொங்கல் வெளியீடாக வரப்போகுது . இதற்கிடையில் ‘ கண்ணா லட்டு தின்ன ஆசையா ‘ பட இயக்குனர் கே . எஸ் . மணிகண்டன் இயக்கத்தில் ‘ ஓடி ஓடி உழைக்கணும் ‘ படத்தில் நடித்து வருகிறார் .

இப்படத்திற்காக சமீபத்தில் சென்னையில் அதிரடியான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது . வில்லனாக நடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் டூப் இல்லாமல் மேலிருந்து கீழே தலைகீழாக தொங்கியும் , மிக உயரத்திற்கு ஜம்ப் செய்தும் நடித்துள்ளார் .

102
-
Rates : 0

Leave a Reply

%d bloggers like this: