ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டின்போது பதற்றமடைந்த ரஜினி: ஏமி ஜாக்சன் பேட்டி

ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2017 தீபாவளியன்று வெளிவருகிறது.
ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ஏமி ஜாக்சன் கூறியதாவது: அவர் மிகவும் தன்னடக்கத்துடன் பழகக்கூடியவர். ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதற்கு முன்பு, நானும் ரஜினியும் நடித்துக்கொண்டிருந்தோம். அப்போது அவரிடம் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளதா என்று கேட்டேன்.
அதற்கு அவர், ஆமாம். இதனால் மிகவும் படபடப்பாக உள்ளது. ஊடகங்கள் என்னைக் கவனிக்கும்போது மிகவும் பதற்றமாக இருப்பேன் என்றார்.
இதைவைத்து அவர் மிகவும் அடக்கமானவர் என்று அறிந்துகொள்ளலாம் என்று ஏமி ஜாக்சன் பேட்டியளித்துள்ளார்.

137
-
Rates : 0
Related videos

Leave a Reply

%d bloggers like this: